மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெயரில் ரூ.97 லட்சம் மோசடி ; திள்ளுமுள்ளு செய்த பெண் மேலாளர் மீது நடவடிக்கை
Author: Babu Lakshmanan22 August 2022, 7:13 pm
வேலூர் : குடியாத்தம் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து 97 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைதான பெண் மேலாளர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை இயங்கி வருகிறது. இந்த வங்கியின் கிளை மேலாளராக பணியாற்றிய உமா மகேஷ்வரி என்பவர் கடந்த 2018-19ம் ஆண்டுகளில் இந்த வங்கியில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக சில மாதங்களுக்கு முன்பே புகார் எழுந்தது.
அப்போது, அது செய்தி வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியது. அந்த புகாரின் பேரில் கூட்டுறவு சங்க தணிக்கை அதிகாரிகள் மத்திய கூட்டுறவு வங்கி குடியாத்தம் கிளையில் ஆய்வு செய்தனர்.
இதில், 2018-19-ம் நிதியாண்டில் மகளிர் சுய உதவி குழுக்களின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூபாய் 97 லட்சம் கடன் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இது தொடர்பான விசாரணையில், கிளை மேலாளர் உமாமகேஸ்வரி இந்த மோசடியில் நேரடியாக ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் வேலூர் கூட்டுறவு துணைப்பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி, அளித்த புகாரின்பேரில், வேலூர் வணிக குற்றப் பிரிவு போலீசார் வழக் குப்பதிவு செய்து உமா மகேஸ்வரியை கைது விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்பு அவரை செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், உமாமகேஸ்வரி பணியிடை செய்யப்பட்டார் நீக்கம் செய்யப்பட்டார். இதற்கிடையில் உமாமகேஸ்வரி சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில், உமா மகேஸ்வரியை பணி நீக்கம் செய்து, வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு பொது மேலாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், வங்கி தொடர்பாக பொதுமக்கள் யாரும் உமாமகேஸ்வரியிடம் தொடர்பு கொள்ளக்கூடாது எனவும், மீறி தொடர்பு கொண்டு பணத்தை இழந்தால் வங்கி பொறுப்பாகாது என தெரிவித்துள்ளதாக கூட்டுறவு வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
0
0