இருசக்கர வாகனத்தின் மீது ஏறிய லாரி… நூலிழையில் உயிர்தப்பிய இருபெண்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

Author: Babu Lakshmanan
29 July 2022, 11:25 am

வேலூர் : இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் நூலிழையில் உயிர் தப்பித்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல் ஆலத்தூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் இரண்டு பெண்கள் குடியாத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்புறமாக முரம்பு ஏற்றி வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், லாரி இருசக்கர வாகனம் மீது முழுவதுமாக ஏறிய நிலையில் இரண்டு பெண்களும் நூலிழையில் உயிர்தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் காவல் துறையினர், லாரிக்கு அடியில் சிக்கிய இரு சக்கர வாகனத்தை மீட்டு விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://vimeo.com/734607656
  • நகைச்சுவை நடிகர் மரணம்.. வீட்டுக்கே சென்று ₹1 லட்சம் கொடுத்த விஜய்.. அறிந்திராத உண்மை!
  • Views: - 907

    0

    0