ஆட்டுப்பட்டியில் ஒரு ஜம்ப்… ஆட்டின் கழுத்தை பிடித்து குதறிய சிறுத்தை.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்!!

Author: Babu Lakshmanan
31 May 2024, 10:07 am

பேரணாம்பட்டு அருகே விவசாய நிலத்துக்குள் புகுந்து சிறுத்தை, ஆட்டை கடித்தே கொன்ற பதப்பதக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பெரிய தாமல் செருவு கிராமத்தில் சரவணன் என்பவரின் நிலத்தில் உள்ள ஆடு கொட்டகையில் இரவு சிறுத்தை ஒன்று உள்ளே புகுந்து ஆட்டு கொட்டகையில் இருந்து ஆட்டின் கழுத்தை கடித்து அதன் ரத்தத்தை குடித்துக் கொண்டு இருந்து உள்ளது.

அவை நிலத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும், நிலத்திலிருந்து நாய்கள் கத்தியதில் ஆட்டை அங்கேயே விட்டு சிறுத்தை தப்பி ஓடி உள்ளது.

மேலும் படிக்க: நேற்றிரவு திடீரென பயங்கர காட்டுத்தீ.. அரை கிலோ மீட்டருக்கு பற்றி எரிந்த பெரும்பாக்கம் சதுப்பு நிலம்!!!

மேலும், இது குறித்து நில உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், “அவ்வப்பொழுது நிலத்தில் வந்து சிறுத்தை ஆடுகளை கடித்து இழுத்து சென்று விடுகிறது. மேலும், இங்குள்ள நிலங்களில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் பல பேரின் ஆடுகளை கடித்து இழுத்துச் சென்று விடுகிறது,” என்று தெரிவித்துள்ளனர்.

இதுவரையும் சிறுத்தையினால் சுமார் 20க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்து உள்ளதாகவும், தற்போது ஆட்டை சிறுத்தை கடித்துக்கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கி உள்ளது.

மேலும், இங்கு சிவன் கோவில் அமைந்திருப்பதால் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பிரதோஷம் மற்றும் பௌர்ணமி போன்ற நாட்களில் நிகழ்ச்சிகள் நடைபெறுவதை காண வருகின்றனர்.

சிறுத்தையினால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இருக்க சிறுத்தை பிடித்து, மற்றொரு விரிவு காப்பு காட்டில் கொண்டு சென்று விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள், பக்தர்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

  • Ethirneechal 2 cast updates விஜய் டிவியில் இருந்து சன் டிவி-க்கு தாவிய நடிகை…அப்போ எதிர்நீச்சல் 2 வில்லி இவுங்க தானா..!
  • Views: - 432

    0

    0