வேலூரில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு.. கொடியுடன் சாலையில் திரண்ட கூட்டம்… போலீசாருக்கும், திமுகவினருக்கும் வாக்குவாதம்!!

Author: Babu Lakshmanan
19 June 2023, 9:57 pm

ஆளுநர் ரவி வருகையின் போது திமுகவினர் எதிர்ப்பு கோஷமிடுவதற்காக வந்தபோது, போலீசாருக்கும், திமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளுவர் அரசு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 17ஆவது பட்டமளிப்பு விழா ஒரே மேடையில் ஆளுநர் யார் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மத்திய இணை அமைச்சர் வி கே சிங் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்காட்டில் உள்ள அரசு திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தின் 17வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநரும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான R.N .ரவி, மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே சிங், தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில், 417 முனைவர் பட்டங்கள் பெற்றவர்கள் உள்பட 564 மாணவ மாணவியர்களுக்கு நோடியாக ஆளுநர் R.N. ரவி பட்டங்களை வழங்கினார். இந்த ஆண்டு மொத்தமாக 1,13,275 மாணவ மாணவியர்கள் பட்டங்களை பெற்றனர்.

நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் வி கே சிங் பேசியதாவது :- பட்டங்களை பெற்றுள்ள மாணவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். கல்லூரி படிப்பை முடித்துள்ள நீங்கள் உலகில் பல சவால்களை எதிர்த்து போராட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். நம் நாட்டின் வளர்ச்சியின் பாதையில் மாணவர்களின் பங்கு அதிக அளவில் இருக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் இலக்கினை அடைய கடுமையான உழைப்பை பயன்படுத்த வேண்டும். தொழில் முனைவர்களாக மாறினால் தங்களின் வாழ்க்கை பிரகாசிக்கும்.

தொழில் முனைவோர்களாக இளைஞர்களுக்கு மத்திய அரசு பல்வேறு வகைகளில் உதவிகளை அளித்து வருகிறது. அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மத்திய அரசு பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களை நம்பியுள்ளது. இந்தியா மற்ற நாடுகளை விட சுய தொழில் துவங்குவதில் முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் 61 வகையான தொழில்களுக்கு 132 நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. இதனால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது. கொரோனா காலத்திற்குப் பின்பு இந்தியாவின் பொருளாதாரம் 6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. எனவே, மாணவர்கள் தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். படித்த இளைஞர்கள் அனைவரும் அரசு வேலை நம்பி இருக்க வேண்டாம்.

ஒட்டு மொத்தமாக நான்கு சதவீதம் அளவிற்கு அரசு துறையில் வேலை வாய்ப்புகள் உள்ளது. மீதமுள்ள 96 சதவீதம் தனியார் வேலை வாய்ப்புகள் உள்ளது. 2015 ஆம் ஆண்டில் இந்தியாவில் 428 சுயதொழில் நிறுவனங்களில் இருந்தன. அதன் பிறகு மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையால், தற்பொழுது 80 ஆயிரம் சுய தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளது. எனவே, இளைஞர்கள் சுயதொழில் துவங்க முன்வர வேண்டும். இதற்கு மத்திய அரசு தேவையான உதவிகளை அளித்து வருவதாகவும், அமைச்சர் பேசினார்.

விழா ஆரம்பிப்பதற்கு முன்,பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வருகை தரும் தமிழக ஆளுநர் ரவிக்கு எதிராக கோஷமிட திடீரென்று திமுகவினர் கட்சிக் கொடியுடன் வேலூர் மாநகர துணை மேயர் சுனில்குமார் தலைமையில் திரண்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் திமுகவினருக்கும், போலிஸாருக்கும் தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது…. பின்னர் அவர்கள் முதல்வர் ஸ்டாலின் வாழ்க என கோஷமிட்டு கலைந்து சென்றனர்.

  • Viveks Twin Daughterநடிகர் விவேக்கிற்கு பிறந்த இரட்டை குழந்தைகள்.. வெகு நாள் கழித்து வெளியான உண்மை!
  • Views: - 416

    0

    0