மனிதநேய மக்களாட்சி தொய்வின்றி தொடர… நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் ; கதிர் ஆனந்த் வாக்குசேகரிப்பு…!!

Author: Babu Lakshmanan
12 April 2024, 8:02 pm

தமிழகத்தில் வரும் 19ம் தேதி நடக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடும் கதிர் ஆனந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திற்காக வாக்குகளை சேகரித்து விட்டு சென்றனர். தந்தையும், அமைச்சருமான துரைமுருகனும் கதிர் ஆனந்திற்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து, கூட்டணி கட்சி தலைவர்களும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அதேவேளையில், கதிர் ஆனந்த் வீதி வீதியாக, தெரு தெருவாக சென்று, வியாபாரிகள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரிடையும் வாக்குகளை சேகரித்து வருகிறார். செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மேலும் படிக்க: பழச நினைச்சு வருத்தப்படாதீங்க… இந்த முறை என் அண்ணன் வந்திருக்காரு ; சண்முக பாண்டியன் முதல்முறையாக பிரச்சாரம்..!!

இந்த நிலையில், பிரச்சாரத்தின் நடுவே டீக்கடையில் டீக்குடித்து வாக்குசேகரித்து கொண்டிருந்த போது, அங்கு வந்த மூதாட்டிக்கு பிஸ்கட் வாங்கி கொடுத்து நெகிழச் செய்தார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், மனிதநேய மக்களாட்சி தொய்வின்றி தொடர்ந்திட திமுக வேட்பாளரான தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கூறி, X தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

“கொரோனா பேரிடரில் வேலூர் நாடாளுமன்றத் தொகுதி மக்களுடன் நான் நின்றேன். மாண்புமிகு முதலமைச்சரின் உதவியுடன் ஆயிரக்கணக்கானோரை ஆக்சிசன் உதவியுடன் காப்பாற்றினோம்!! ஒன்றிணைவோம் வா என உதவிக் கரம் நீட்டினோம்,” என்ற பதிவுடன் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 465

    0

    0