அனல் பறக்கும் இறுதிகட்ட பிரச்சாரம்… கதிர் ஆனந்த் கொடுத்த வாக்குறுதி… பூரிப்பில் மக்கள்..!!

Author: Babu Lakshmanan
16 April 2024, 4:17 pm

வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்தின் இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரம் மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பேரணாம்பட்டு, பத்தலப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில், அனல் பறக்கும் பிரச்சாரம் மக்களை வெகுவாக கவர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பத்தலப்பள்ளி அணை, பத்தலப்பள்ளி ஆற்று தரைப்பாலம் கட்டி தரப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். வேலூர் தொகுதியில் கடுமையான போட்டி நிலவி வந்த நிலையில், அவரது குறிப்பிட்ட சில வாக்குறுதிகள் தேர்தல் களத்தையே மாற்றி உள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே, கடந்த தேர்தலில் கிடைத்த வெற்றி இந்த முறையும் கிடைக்கும் என்று கதிர் ஆனந்த் ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 466

    0

    0