‘தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினேன்’… பிரச்சாரத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் சொன்ன பகீர் தகவல்..!!
Author: Babu Lakshmanan28 March 2024, 12:02 pm
குடியாத்தம் பகுதியில் கைத்தறி நெசவு செய்தவாறு வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வாக்குகளை சேகரித்தார்.
வேலூர் மக்களவைத் தொகுதிகுட்ட பரதராமி கொண்டாசமுத்திரம், காந்திகர்காளியம்மன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வாக்குகளை சேகரித்தார். அப்பொழுது, கைத்தறி நெசவு செய்தவாறு, அங்கு உள்ள பொதுமக்களிடம் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வாக்குகளை சேகரித்தார்.
வாக்கு சேகரிப்பின் போது பேசிய திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், 100 நாள் வேலையை முடக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. 1000 திட்டத்தை தகுதியுள்ள அணைவரும் வழங்கிய முதலமைச்சர் நம் முதலமைச்சர் தான். இந்த பகுதியில் பல்வேறு திட்டங்களை நான் செய்துள்ளேன்.
குடியாத்தம் பகுதிக்கு ரிங் ரோடு திட்டத்தை தரவில்லை என்றால் நாடாளுமன்றதிலேயே தற்கொலை செய்து கொள்வேன் என கூறினேன்.
221 கோடி ரூபாயில் மதிப்பிட்டில் அந்த திட்டம் குடியாத்தம் பகுதிக்கு வந்துள்ளது. எனக்கு வாக்களித்து மீண்டும் நாடாளுமன்றத்திற்கு அனுப்புங்க, இன்னும் பல திட்டங்கள் வந்து சேரும், என பேசினார்.