மது அருந்தி புத்தாண்டை கொண்டாடியவர்கள் படுகொலை ; போலீசாரிடம் சிக்கிய சிசிடிவி.. மர்ம நபருக்கு வலைவீச்சு!

Author: Babu Lakshmanan
2 January 2023, 9:04 am

வேலூர் அருகே மது அருந்திக் கொண்டிருந்தவர்கள் மீது மர்ம நபர் கத்தி குத்து தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த வி.சி.மோட்டூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் குழந்தைவேல் (35). பைக் மெக்கானிக் மற்றும் லோடு ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரேமா. இவருக்கு 2 வயதில் ஒரு மகள் உள்ளார்.வி.சி.மோட்டூர் தனலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன்(35). லாரி எலக்ட்ரிஷியன். இவரது மனைவி ரேகா. இவருக்கு 1 மகன், 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில், குழந்தைவேல் மற்றும் சரவணன் ஆகியோர் நேற்று மாலை புத்தாண்டை முன்னிட்டு விசி மோடூரில் உள்ள லாரி மெக்கானிக் செட்டில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது மர்ம நபர் ஒருவர் குழந்தைவேலுவை கத்தியால் குத்தியுள்ளார். இதனை தடுக்க சென்ற சரவணனையும் கத்தியால் குத்தி அங்கிருந்து மர்ம நபர் தப்பி சென்றனர்.

இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைவேல் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சரவணன் தீவிர சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து டி.எஸ்.பி பிரபு, இன்ஸ்பெக்டர் காண்டீபன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், வழக்கு பதிவு செய்து கொலை செய்த மர்ம நபர் யார்..? எந்த ஊரை சேர்ந்தவர்..? ஏதேனும் முன்விரோத காரணமாக கொலை நடந்துள்ளதா..? என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், லாரி செட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு லாரியின் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்த அந்த லாரியை வாலாஜா போலீஸார் கைப்பற்றி எடுத்து சென்றனர். போலீஸார் முதற்கட்ட விசாரணையில், சி.சி.டி.வி கேமராவை பார்க்கும் போது, சந்தேகத்தின் பேரில் ஒரு நபரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புத்தாண்டு அன்று ஒரே ஊரை சேர்ந்த இரண்டு பேர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

  • Viveks Twin Daughterநடிகர் விவேக்கிற்கு பிறந்த இரட்டை குழந்தைகள்.. வெகு நாள் கழித்து வெளியான உண்மை!
  • Views: - 854

    0

    0