மின் வயர் அறுந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்து பாதிப்பு ; ஒன்றரை மணிநேரம் ரயிலிலேயே சிக்கித் தவித்த பயணிகள்..!!

Author: Babu Lakshmanan
16 August 2022, 7:43 pm

வேலூர் : சேவூரில் மின்சார ரயில் தடத்தில் மின் வயர் அறுந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்து ஒன்றரை மணிநேரம் பாதிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள சேவூர் என்ற இடத்தில் ரயில் பாதை தடத்தில் உள்ள மின் ஒயர் அறுந்து விழுந்தது. சென்னை பெங்களூர் தடத்தில் அறுந்து விழுந்ததால், இண்டர் சிட்டி, லால்பார்க் – திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.

காட்பாடி ரயில் நிலையத்திலிருந்தும், அரக்கோணம் பகுதியிலிருந்து வந்து ரயில்வே துறையினர் மின் பாதையை ஒன்றரை மணி நேரத்தில் சரி செய்தனர். இதனால், ரயில்கள் தற்போது புறப்பட்டு சென்றது. மின் ஒயர் அறுந்து விழுந்ததற்கான காரணம் தெரியவில்லை.

இதனால், ஒன்றரை மணி நேரம் ரயில் பயணிகள் ரயிலிலேயே சிக்கி தவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 752

    0

    0