பிரபல நகைக்கடையில் மீண்டும் மீண்டும் கொள்ளை.. இந்த முறை இரு பெண்கள் கைது ; வெளியான சிசிடிவி காட்சிகள்..!!

Author: Babu Lakshmanan
1 February 2024, 2:56 pm

நகை வாங்குவது போல் வந்து இரண்டு லட்சம் மதிப்புள்ள ஐந்து சவரன் வளையலை திருடிச் சென்ற இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் பகுதியில் ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத இரண்டு பெண்மணிகள் நகை வாங்க வந்துள்ளனர். இருக்கும் மாடல் அனைத்தையும் பார்த்துவிட்டு அவர்கள் நகை வாங்காமலேயே சென்றதாக தெரிகிறது.

பின்பு நகைக்கடை ஊழியர் நகையை எடுத்து வைக்கும் போது, 5 சவரன் தங்க வளையல் ஒன்று காணாமல் போனது தெரிய வந்தது. அதன் பின் நகை கடை ஊழியர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்ததில், இரண்டு பெண்மணிகள் அந்த நகையை எடுத்துச் செல்வது போல் சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது.

பின்பு நகைக் கடை தலைமை மேலாளர் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வடக்கு காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து இரண்டு நாட்களுக்குள் திருடிச் சென்ற இரண்டு பெண்மணியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நரிக்குறவர் காலனி பகுதியை சேர்ந்த புஷ்பா (30), பானுமதி (25). இருவரும் சேர்ந்து திருடிய ஐந்து சவரன் நகையை உருக்கிய நிலையில் மீட்டு ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

அதன்பின் வழக்கு பதிவு செய்து வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மேல் ஏற்கனவே ஈரோட்டில் உள்ள காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு ஆகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கடையில், 2021-டிசம்பர் மாதம் 14-ம் தேதி அன்று கடையின் பின்புறம் சுவரைத் துளையிட்டு நள்ளிரவு புகுந்து மர்ம நபர் ஒருவர் நகைகளைத் திருடிச் சென்ற நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 1000 அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்.
மீண்டும் அதே நகைக் கடையில் இரண்டாவது முறையாக திருடி சென்றது அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…