ஓடும் லாரியில் பற்றி எரிந்த வைக்கோல்.. துரிதமாக செயல்பட்டு சீறிப்பாய்ந்த லாரி ஓட்டுநர்..!

Author: Vignesh
29 June 2024, 12:08 pm

குடியாத்தத்தில் வைக்கோல் பிரி ஏத்தி வந்த லாரி தீப்பற்றியதில் ஓட்டுநர் லாவகமாக ஓட்டிச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நிறுத்தியதால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது – தீப்பற்றிய வைக்கோல் பெண்டல் சாலையில் விழுந்ததால் வாகன ஓட்டிகள் அச்சம் – தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம், திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் இருந்து வைக்கோல் பிரி பெண்டல் ஏற்றி வந்து குடியாத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் அருள் என்பவர் விற்பனை செய்வதற்காக எடுத்து வந்தபோது, குடியாத்தத்தில் இருந்து பேரணாம்பட்டிற்கு செல்லும் போது நெல்லூர் பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்த போது மின் கம்பி உரசி தீ பற்றியது.

பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் இருந்ததால் லாரி ஓட்டுநர் அருள் தீப்பற்றி எரியும் லாரியை லாவகமாக ஓட்டிச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நிறுத்தினார். தீ பற்றி எரியும் லாரியை எடுத்துச் செல்லும் போது எரிந்து கொண்டிருந்த வைக்கோல் பிரி பெண்டல் சாலையில் விழுந்து சென்றதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அச்சமடைந்தனர்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். வைக்கோல் பிரி ஏற்று வந்த லாரி மின்சாரம் கம்பி உரசி தீப்பற்றி எரிந்து அதனை லாரி ஓட்டுநர் லாவகமாக ஓட்டிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி