தரம் குறைக்கப்பட்ட ஆவின் பால்… பச்சை நிற பாக்கெட் முற்றிலும் நிறுத்தம் ; கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து பொதுமக்கள் அதிருப்தி…!!

Author: Babu Lakshmanan
21 October 2023, 1:16 pm

ஆவின் பச்சை நிற பாக்கெட் பால் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்ட நிலையில், பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

வேலூர் ஆவின் பால் பண்ணையில் இருந்து நாள் ஒன்றுக்கு திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சுமார் 93 ஆயிரம் லிட்டர் பால் அனுப்பப்படுகிறது. பச்சை நிற பால் பாக்கெட்டுகள் விநியோகம் குறைக்கப்படுவதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வந்த நிலையில், ஆவின் பாலகங்கள், பால் முகவர்கள் ஆகியோருக்கு பச்சை நிற பால் பாக்கெட் (4.5% கொழுப்புச் சத்துள்ள நிலைப்படுத்தப்பட்ட பால்) விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு மாற்றாக, ஊதா நிற பசும்பால் பாக்கெட் (சமன்படுத்தப்பட்ட பால்) விநியோகம் செய்யப்படுகிறது. இந்த பால் 3.5 சதவீதம் கொழுப்புச் சத்து கொண்டது. பச்சை நிற பாக்கெட் அரை லிட்டர் பால் ₹22க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஊதா நிற பாக்கெட் பாலும் தற்போது 22 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுகிறது.

பச்சை நிற பாக்கெட் பாலை விட, தற்போது விநியோகம் செய்யப்படும் ஊதா நிற பாக்கெட் பால் அடர்த்தி குறைந்தும், சுவை இல்லாமலும் உள்ளதாக பால் முகவர்கள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வேலூர் ஆவின் பொதுமேலாளர் சாம்பமூர்த்தியிடம் கேட்டதற்கு, ‘பச்சை நிற பால் பாக்கெட்டுகள் நிறுத்தப்பட்டு ஊதா நிற பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுகிறது.

மக்கள் மத்தியில் ஊதா நிற பால் பாக்கெட்டுக்கு வரவேற்பு உள்ளதால் கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட பல பகுதிகளிலும், ஊதா நிற பால் பாக்கெட்டுகளே விநியோகம் செய்யப்படுகிறது. மக்கள் ஊதா நிற பால் பாக்கெட்டுகளை விரும்பி வாங்குகிறார்கள்,’ என்றார்.

  • Ajith racing and movies நடிப்பிற்கு bye bye …அஜித் எடுத்த திடீர் முடிவு..அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
  • Views: - 791

    0

    0