ஆவின் பச்சை நிற பாக்கெட் பால் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்ட நிலையில், பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
வேலூர் ஆவின் பால் பண்ணையில் இருந்து நாள் ஒன்றுக்கு திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சுமார் 93 ஆயிரம் லிட்டர் பால் அனுப்பப்படுகிறது. பச்சை நிற பால் பாக்கெட்டுகள் விநியோகம் குறைக்கப்படுவதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வந்த நிலையில், ஆவின் பாலகங்கள், பால் முகவர்கள் ஆகியோருக்கு பச்சை நிற பால் பாக்கெட் (4.5% கொழுப்புச் சத்துள்ள நிலைப்படுத்தப்பட்ட பால்) விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றாக, ஊதா நிற பசும்பால் பாக்கெட் (சமன்படுத்தப்பட்ட பால்) விநியோகம் செய்யப்படுகிறது. இந்த பால் 3.5 சதவீதம் கொழுப்புச் சத்து கொண்டது. பச்சை நிற பாக்கெட் அரை லிட்டர் பால் ₹22க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஊதா நிற பாக்கெட் பாலும் தற்போது 22 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுகிறது.
பச்சை நிற பாக்கெட் பாலை விட, தற்போது விநியோகம் செய்யப்படும் ஊதா நிற பாக்கெட் பால் அடர்த்தி குறைந்தும், சுவை இல்லாமலும் உள்ளதாக பால் முகவர்கள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வேலூர் ஆவின் பொதுமேலாளர் சாம்பமூர்த்தியிடம் கேட்டதற்கு, ‘பச்சை நிற பால் பாக்கெட்டுகள் நிறுத்தப்பட்டு ஊதா நிற பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுகிறது.
மக்கள் மத்தியில் ஊதா நிற பால் பாக்கெட்டுக்கு வரவேற்பு உள்ளதால் கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட பல பகுதிகளிலும், ஊதா நிற பால் பாக்கெட்டுகளே விநியோகம் செய்யப்படுகிறது. மக்கள் ஊதா நிற பால் பாக்கெட்டுகளை விரும்பி வாங்குகிறார்கள்,’ என்றார்.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…
வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…
கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…
எல்லாம் ஸ்பாட்ல வர்ரது பொதுவாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியை படமாக்க ஸ்கிரிப்ட் படி செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் பல…
This website uses cookies.