மழை காரணமாக மரம் சரிந்து விழுந்து விபத்து… சிகிச்சை பெற்று வந்த தந்தை, மகன் பரிதாப பலி..!!

Author: Babu Lakshmanan
9 August 2022, 4:24 pm

வேலூர் : மழை காரணமாக மரம் விழுந்து படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி அருகே மத்தூர் பகுதியை சேர்ந்தவர், மின்சாரத் துறையில் பணிபுரியும் வெங்கடேசன் (48). இவர் தனது மகன் கோபியுடன் (21) குடியாத்தத்தில் இருந்து சொந்த ஊரான பரதராமி மத்தூர் கிராமத்திற்கு கடந்த 4ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது குடியாத்தம் அடுத்த ராமாலை, தண்ணீர்பந்தல் கிராமத்தில் சாலையோரம் இருந்த காய்ந்த மரம் மழையின் காரணமாக வேரோடு சாய்ந்துள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தந்தை வெங்கடேசன், மகன் கோபி இருவரும் படுகாயம் அடைந்திருந்தனர்.

படுகாயம் அடைந்த இருவரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு தந்தை வெங்கடேசன் (48) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த மகன் கோபிநாத்தும் (21) இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மரம் விழுந்து படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 813

    0

    0