வேலூர் : மழை காரணமாக மரம் விழுந்து படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி அருகே மத்தூர் பகுதியை சேர்ந்தவர், மின்சாரத் துறையில் பணிபுரியும் வெங்கடேசன் (48). இவர் தனது மகன் கோபியுடன் (21) குடியாத்தத்தில் இருந்து சொந்த ஊரான பரதராமி மத்தூர் கிராமத்திற்கு கடந்த 4ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது குடியாத்தம் அடுத்த ராமாலை, தண்ணீர்பந்தல் கிராமத்தில் சாலையோரம் இருந்த காய்ந்த மரம் மழையின் காரணமாக வேரோடு சாய்ந்துள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தந்தை வெங்கடேசன், மகன் கோபி இருவரும் படுகாயம் அடைந்திருந்தனர்.
படுகாயம் அடைந்த இருவரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு தந்தை வெங்கடேசன் (48) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த மகன் கோபிநாத்தும் (21) இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மரம் விழுந்து படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
This website uses cookies.