ஆளுநரை குறிவைத்த திமுக… ஊழலை மறைப்பதற்காக இப்படியா..? வேலூர் இப்ராஹிம் பரபரப்பு குற்றச்சாட்டு!!

Author: Babu Lakshmanan
27 October 2023, 8:58 am

ஆளுநரை குறி வைத்து தமிழக முதல்வர், திமுகவும் ஏளனமாகும் ஒருமையிலும் பேசி வருவதாக பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் குற்றம்சாட்டியுள்ளார்.

கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கூறியதாவது :- திமுக என்ற ஊழல் அராஜகத்தை மேற்கொள்ளும் ஆட்சியில் தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. ஆளுநர் மாளிகைக்கு முன்னால் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் மோசமான முன்னுதாரணத்தை திமுக அரசு செய்துள்ளது.

காவல்துறையும், உளவுத்துறையும் முடங்கிக் கொண்டுள்ளது. ஆளுநரை குறி வைத்து தமிழக முதல்வர், திமுகவும் ஏளனமாகும் ஒருமையிலும் பேசி வருகின்றனர். ஊழலை மறைக்க வேண்டும் என்று செயலில் திமுக ஈடுபடுகிறது.
மத்திய புலனாய்வு அமைப்பு இதில் விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.

பாஜகவின் எழுச்சி என்பது 2024 பாராளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும். பாரதிய ஜனதா கட்சி இரட்டை இலக்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களை நிச்சயமாக இம்முறை அனுப்பும். தனித்து நின்றாலும், கூட்டணி என்றாலும் தங்களின் சுய பலத்தோடு வெற்றியை பாஜக பதிவு செய்வோம். நீட் தேர்வில் முட்டையை கையில் வைத்து உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு காட்டுகிறார். அவர் விளையாட்டுத்துறை அமைச்சர் தானே தவிர, அவரே விளையாடிக் கொண்டிருக்கிறார்.

திமுக அரசு திட்டமிட்டு இஸ்லாமியர்களை தூண்டிவிட்டு வன்முறை ஏற்படுத்தி தேர்தல் நேரத்தில் இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் கலவரத்தில் நடக்கும் உயிரிழப்புகளில் ரத்தத்தை குடித்து, அதன் மூலம் வாக்கு வங்கியை சேகரிக்க திமுக விரும்புகிறது. அதனை பாரதிய ஜனதா கட்சி அனுமதிக்காது.

தேசத்தை நேசிக்கும் ஒவ்வொரு இஸ்லாமியர்களும், மத, மொழி இனங்களைக் கடந்து பிரதமர் மோடியின் கருத்தை வலுப்படுத்த பாஜகவிற்கு வாக்களிப்பார்கள். தமிழகம் தாமரையின் மூலமாக மாற்றத்தை ஏற்படுத்தும், எனக் கூறினார்.

  • Kasthuri About 60-Year-Old Actor 60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!