வேலூர் ; பேரணாம்பட்டு அருகே மலைப்பகுதிகளில் ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் ஊறல் அழிக்கப்பட்ட நிலையில், 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேரணாம்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
இதையடுத்து குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி உத்தரவின் பேரில், இன்று பேரணாம்பட்டு போலீசார் பேரணாம்பட்டு அருகே உள்ள சாத்கர்மலை, அல்லேரி, கங்காச்சாரம், விலங்காமரத்தடி, அரவட்லா, உள்ளிட்ட மலைப்பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, கள்ளசாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் மற்றும் ஆயிரம் லிட்டர் கள்ளச் சாராய ஊறல்களை அழித்தனர். மேலும், விற்பனைக்காக லாரி ட்யூப்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 400 லிட்டர் கள்ளச்சாராயத்தையும் பறிமுதல் செய்து போலீசார் அழித்தனர்.
மேலும், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட்டதாக விக்னேஷ், சங்கர், அருள்மணி, ஆகாஷ் உள்ளிட்ட நான்கு பேரை பேரணாம்பட்டு போலீசார் கைது செய்தனர். மேலும், அங்கு இருந்து தப்பி ஓடிய நான்கு பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பேரணாம்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.