மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் பலி!!
Author: Babu Lakshmanan23 June 2022, 10:17 am
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பேரணாம்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் மலைப்பாதையில் அதிகாலை லாரி கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஓட்டுனர் பலியானார்
கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை பகுதியிலிருந்து சென்னைக்கு லாரியில் அரிசி லோடு ஏற்றிக்கொண்டு, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன் (38) என்பவர் ஓட்டி வந்தார். அப்பொழுது, வி.கோட்டா மலைப்பகுதியில் வந்துகொண்டிருந்த லாரி, பத்திரப்பல்லி சோதனைச்சாவடி அருகே வந்த போது தனது கட்டுப்பாட்டை இழந்து சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதுகுறித்து பேரணாம்பட்டு தீயணைப்பு துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வந்த சம்பவ இடத்திற்கு வந்த பேரணாம்பட்டு தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் 50 அடி பள்ளத்தில் இருந்த ஓட்டுநர் வேல்முருகனின் உடலை மீட்டனர்.
பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டு, இந்த விபத்து குறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.