சிமெண்ட் கலவை ஏற்றிச் சென்ற லாரி ஆட்டோ மீது கவிழ்ந்து விபத்து… வெளியானது பகீர் சிசிடிவி காட்சி!!!

Author: Babu Lakshmanan
12 March 2022, 2:29 pm

வேலூர் மாவட்டம் சிமெண்ட் கலவை ஏற்றி சென்ற வாகனம் ஆட்டோ மீது கவிழ்ந்த விழுந்ததில் இருவர் படுகாயம் அடைந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

வேலூர் சத்துவாச்சாரியில் இருந்து வேலூர் நோக்கி சிமெண்ட் ஜல்லி கலவை எந்திரம் பொருத்தப்பட்ட லாரி ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் வந்தது. சென்னை சில்க்ஸ் ஜவுளி கடை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சர்வீஸ் சாலையில் லாரி இறங்கியது. அப்போது லாரியில் பொருத்தப்பட்டிருந்த ஜல்லி கலவை எந்திரம் தனியாக கழண்டு சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவின் மீது விழுந்தது‌.

இந்த விபத்தில் ஆட்டோ முழுவதும் நொறுங்கியது. இதில் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அண்ணாமலை மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த பெண் பயணி எலிசபெத் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர் அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த விபத்தால் சத்துவாச்சாரியில் இருந்து வேலூர் புதிய பஸ் நிலையம் செல்லும் சர்வீஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. லாரியில் இருந்து கழன்று விழுந்த எந்திரம் மற்றும் ஆட்டோவை அங்கிருந்து அப்புறப்படுத்திய பிறகு போக்குவரத்து சீரானது. இச்சம்பவம் குறித்து வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

https://vimeo.com/687391150
  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!