வேலூர் மாவட்டம் சிமெண்ட் கலவை ஏற்றி சென்ற வாகனம் ஆட்டோ மீது கவிழ்ந்த விழுந்ததில் இருவர் படுகாயம் அடைந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
வேலூர் சத்துவாச்சாரியில் இருந்து வேலூர் நோக்கி சிமெண்ட் ஜல்லி கலவை எந்திரம் பொருத்தப்பட்ட லாரி ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் வந்தது. சென்னை சில்க்ஸ் ஜவுளி கடை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சர்வீஸ் சாலையில் லாரி இறங்கியது. அப்போது லாரியில் பொருத்தப்பட்டிருந்த ஜல்லி கலவை எந்திரம் தனியாக கழண்டு சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவின் மீது விழுந்தது.
இந்த விபத்தில் ஆட்டோ முழுவதும் நொறுங்கியது. இதில் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அண்ணாமலை மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த பெண் பயணி எலிசபெத் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர் அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்தால் சத்துவாச்சாரியில் இருந்து வேலூர் புதிய பஸ் நிலையம் செல்லும் சர்வீஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. லாரியில் இருந்து கழன்று விழுந்த எந்திரம் மற்றும் ஆட்டோவை அங்கிருந்து அப்புறப்படுத்திய பிறகு போக்குவரத்து சீரானது. இச்சம்பவம் குறித்து வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் தனுஷ். நடிகராக மட்டுமல்லாமல், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர்.…
யாருடைய கையிலும், காலிலும் விலங்கு போட்டு நிறுத்துவது இயக்கம் அல்ல என நாதகவில் இருந்து நிர்வாகிகள் விலகுவது குறித்து சீமான்…
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்ட்ர் ஹர்திக் பாண்டியா அடிக்கடி பேசு பொருளாக உலா வருகிறார். தனது மனைவியை விவாகரத்து செய்வதாக…
தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், தமிழகத்தில் 31 தொகுதிகள்தான் இருக்கும். 8 தொகுதிகளை இழக்க வேண்டியச் சூழல் ஏற்படும் என முதலமைச்சர்…
கணவரை இழந்த நடிகைகளை குறி வைத்து அவர்களுடன் சில பல நாட்கள் பழகி கழட்டி விடுவதே இந்த பிரபல நடிகரின்…
This website uses cookies.