வயலில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பால் வியாபாரி… தொழில் போட்டியால் அரங்கேறிய கொடூரக்கொலை ; வேலூரில் அதிர்ச்சி!

Author: Babu Lakshmanan
11 January 2023, 8:14 pm

வேலூர் ; தொழில் போட்டி காரணமாக பால் வியாபாரி கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லத்தேரி அடுத்த வடுங்கன்தாங்கல், பிஎன்.பாளையத்தை சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி(40) 15 வருடங்களாகவும், நாகேஷ்(41) 5 வருடங்களாகவும் பால் விற்பனை செய்து வருகின்றனர்.

இதில், மாட்டின் உரிமையாளர்களிடம் இருந்து ஒரு லிட்டர் பாலை 23 ரூபாய்க்கு கிருஷ்ண மூர்த்தி பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், நாகேஷ் (41) ஒரு லிட்டர் பாலை 26 ரூபாக்கு பெற்றுள்ளார். இதனால் இதுவரை கிருஷ்ண மூர்த்தியிடம் பால் ஊற்றி வந்தவர்கள், தற்போது நாகேஷிடம் பால் ஊற்றியுள்ளனர்.
இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொழில் போட்டி காரணமாக ஏற்பட்ட தகராறில் நாகேஷ் (41) என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலை செய்த கிருஷ்ண மூர்த்தியை கைது செய்து லத்தேரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Cool Suresh vs Vijay “WHAT BRO”நான் குல்லா போடுற ஆள் இல்லை..மேடையில் விஜயை தாக்கிய பிரபலம்.!