வேலூரில் பார்க்கிங் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் நில உரிமையாளரின் சகோதரரை கல் வீசி தாக்குதல் நடத்திய திமுக கவுன்சிலரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி விஜயராகபுரம் பகுதி சேர்ந்தவர் ராஜசேகர். இவர் அவரது சகோதரருக்கு சொந்தமான சத்துவாச்சாரி பகுதியில் உள்ள பார்க்கிங் யார்டில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 26வது வார்டு திமுக கவுன்சிலர் சேகர் என்பவருக்கு சொந்தமான வீடு மற்றும் குடோன் ராஜசேகரின் சகோதரரின் பார்க்கிங் யார்டுக்கு அருகே உள்ளது. இந்த நிலையில் ராஜசேகரின் சகோதரருக்கு சொந்தமான இடத்தை திமுக மாமன்ற உறுப்பினர் சேகர் தொடர்ந்து அபகரிக்க முயல்வதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சேகர் மற்றும் அவரது மருமகன் மற்றும் அவரது உறவினர்கள் இணைந்து பார்க்கிங் யார்டுக்குள் அத்துமீறி நுழைந்து ராஜசேகர் மற்றும் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இது அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் காட்சியாக பதிவாகியுள்ளது. மேலும் அங்கிருந்த பெரிய கல்லை எடுத்து திமுக மாமன்ற உறுப்பினர் சேகர் ,ராஜசேகர் மீது போட்டு கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டார்.
இதனால் படுகாயம் அடைந்த ராஜசேகர் வேலூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தனியாருக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிக்க முயன்று நிலத்தில் உரிமையாளரின் சகோதரரை திமுக மாமன்ற உறுப்பினர் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. வேலூர் மாநகராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.