போலீஸ் இன்ஃபார்மர் கழுத்தறுத்து கொடூரமாக கொலை… இளம்பெண் உள்பட 3 பேர் கைது : வேலூரில் பயங்கரம்..!!

Author: Babu Lakshmanan
7 November 2023, 10:38 am

வேலூர் அருகே போலீஸ் இன்ஃபார்மர் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் இளம்பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர் கோட்டை அகழியில் கடந்த அக்டோபர் 19ம் தேதி கழுத்துறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில், அடையாளம் தெரியாத இளைஞரின் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இறந்தவர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது கடந்த இரண்டு மாதமாக தெரியாமல் இருந்த நிலையில், டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், இறந்தவர் ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த 25 வயதுடைய சிரஞ்சீவி என்பதும், 8 பேர் கொண்ட கும்பல் கொலை செய்து கோட்டை அகழியில் வீசியதும் தெரியவந்துள்ளது.
(கொலை செய்யப்பட்ட சிரஞ்சீவியும் பல வழக்குகளில் தொடர்புடையவர், போலீஸ் இன்பார்மராக இருந்து வந்துள்ளார்)

சிரஞ்சீவி கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியான அஜித் மற்றும் விக்கி ஆகியோர் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது குறித்து சிரஞ்சீவி போலீசாருக்கு தகவல் கொடுத்த ஆத்திரத்தில், வேலூர் கோட்டை அகழிக்கு இளம்பெண் ஜெயஸ்ரீ மூலமாக வரவழைத்து திட்டமிட்டு கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிந்தது.

பின்னர் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பாகாயம் பகுதியைச் சேர்ந்த பரத், வேலூர் பலவன் சாத்து குப்பம் பகுதியை சேர்ந்த அப்பு மற்றும் சென்னையை சேர்ந்த இளம் பெண் ஜெயஸ்ரீ ஆகியவரை கைது செய்தனர். சென்னையை சேர்ந்த மாரிமுத்து மற்றும் வேலூரைச் சேர்ந்த பத்ரி ஆகியோர் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் தற்போது உள்ளனர். மீதமுள்ள முக்கிய குற்றவாளிகளான சென்னையை சேர்ந்த அஜித் விக்கி மற்றும் வேலூரைச் சேர்ந்த காளி ஆகிய 3 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

மேலும், கைதாகி உள்ள இளம் பெண்ணை வேலூர் பெண்கள் தனி சிறையிலும், பரத் மற்றும் அப்புவை வேலூர் ஆண்கள்

  • Revanth Reddy on Pushpa 2ரேவந்த் ரெட்டியை சந்திக்க தயார்…அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக கிளம்பிய திரையுலகினர்..!
  • Views: - 885

    0

    0