மாணவி பாலியல் விவகாரம் குறித்து திமுக அரசுக்கு எதிராக கருத்து : காவலர் சஸ்பெண்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
31 December 2024, 1:53 pm

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Vellore Police Suspend After Post comments against DMK Government

இந்த சம்பவத்தில் திமுக அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சட்டம்-ஒழுங்கு பாதிப்பு தொடர்பாக சமூகவலை தளங்களில் திமுக அரசுக்கு எதிரான கடுமையான கருத்துக்களைப் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்க: பஞ்சு சாட்டையா? கொண்டு வருகிறேன்.. சோதித்து பார்க்கலாமா? திமுக கவுன்சிலருக்கு அண்ணாமலை சவால்!

இதற்கிடையில் வேலூர் மாவட்டம் வேலூர் கிராமிய காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருபவர் அன்பரசன். இவர், தனது முகநூல் பக்கத்தில் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிராகக் கருத்து பதிவு ஒன்றுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்து பகுதியில் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Vellore Police Suspend

இதுகுறித்த புகாரின் பேரில் மாவட்ட காவல் துறையினர் நேற்று விசாரணை மேற்கொண்டனர் இதன் தொடர்ச்சியாக அன்பரசனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவிட்டுள்ளார்.

  • ஆள விடுங்கடா சாமி…அஜித் படத்தால் நடிப்பதையே வெறுத்துட்டேன்…’வீரம்’ பட நாயகி பரபர பேட்டி.!