வேலூர் ; தேர்வுக்கு படிக்காததால் பாட்டியின் செல்போனில் இருந்து பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவியின் காரணத்தை கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருநகர் பகுதியில் உள்ளது தனியார் பி.எம்.டி ஜெயின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளதாக சென்னையில் உள்ள தலைமை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி எண்ணில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதுகுறித்து சென்னை கட்டுப்பாட்டு அறை காவலர்கள் வெடிகுண்டு மிரட்டல் குறித்து வேலூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில், வேலூர் மாவட்ட காவல் துறையினர் வெடிகுண்டு மிரட்டல் வந்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த எண் வேலூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வள்ளலார் திரு, ஓல்டு டவுனில் காண்பித்துள்ளது.
உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், இப்பகுதியை சேர்ந்த மாணவி கழிஞ்சூர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாவது படித்து வருவதும், இன்று நடைபெறவிருக்கும் புவியியல் தேர்வுக்கு படிக்காத காரணத்தால் தேர்வு பயத்தில் அவருடைய பாட்டியின் கைபேசியை எடுத்து அவசர எண் 100க்கு அழைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் வேலூர் மாவட்ட காவல் குழுவினர் மற்றும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்க செய்யும் குழுவினர் விரைந்து சென்று தனியார் பள்ளியில் சோதனை மேற்கொண்டதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரிய வந்துள்ளது. எனவே, இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் திமுகவில் சேர்ந்து புதிய பதவிக்கு தேர்வான சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ், ஒரு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்யை…
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பழைய நகரத்தை சேர்ந்த கணேஷ், ஜோஸ்னாவும் வேலைக்காக பெங்களூரு சென்றனர். இவர்களுக்கு அனந்தபூர் மாவட்டம் குந்தகல்லை…
நடிகர் விக்ரம் கடின உழைப்புக்கு பெயர் போனவர். பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்த விக்ரம், தனக்கான வாய்ப்பை தேடி…
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
This website uses cookies.