‘புலிக்குட்டி விற்பனைக்கு… 10 நாளில் டெலிவரி’ ; வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த சட்டக்கல்லூரி மாணவர்.. வீடு தேடி வந்த போலீஸ்..!!
Author: Babu Lakshmanan7 September 2022, 1:43 pm
வேலூர் அருகே புலி குட்டி ரூ.25 லட்சத்திற்கு விற்பனைக்கு இருப்பதாக வாட்ஸ் அப்பில் Status வைத்த சட்டக்கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் சார்ப்பனாமேடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் பார்த்திபன். இவர், திருப்பதியில் சட்டம் பயின்று வருகிறார். மேலும், நாய் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை வாங்கி, விற்கும் பணியையும் அவர் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், இவர் புலிகுட்டி விற்பனைக்கு என தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். அதுவும் ரூ.25 லட்சத்திற்கு என்றும், 10 நாட்களில் டெலிவரி செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக வேலூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில், பார்த்திபனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்னை அம்பத்தூரை சேர்ந்த தமிழ் என்பவரை பிடித்து வனவிலங்கு பாதுகாப்பு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.