வேலூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பொறியியல் கல்லூரி மாணவனை பளார் என போக்குவரத்து காவல் ஆய்வாளர் அரைந்ததால் வாயில் ரத்தம் கொட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் அரசு பொறியியற் கல்லூரியில் இரண்டாம் ஆண்டும் பயிலும் மாணவர்கள் தினேஷ் மற்றும் சூர்யா. இவர்கள் இருவரும் கல்லூரி முடிந்து ஒரே இருசக்கர வாகனத்தில் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள மேம்பாலத்தின் கீழே வந்தனர்.
அப்போது இருசக்கர வாகனத்தை போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன், மாணவர்களை மிரட்டி அவர்களுக்கு ஆயிரம் அபராதம் விதித்துள்ளார். இதனால், அதிர்ந்து போன மாணவர்கள், “தங்களிடம் உரிய ஆவணங்கள் உள்ளது, தலைக்கவசம் அணிந்துள்ளோம் பிறகு ஏன் அபராதம் விதித்துள்ளீர்கள்..?” என கேட்டதற்கு, ஆத்திரமடைந்த காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் மாணவர் தினேஷின் கண்ணத்தில் ஓங்கி பளார் என அரைந்துவிட்டு, அவரது செல்போனை பிடுங்கி கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்து மாணவனின் உறவினர்களும், பெற்றோர்களும், சக மாணவர்கள் காவல்துறையினரின் அராஜகத்தின் உச்சத்தை கண்டித்து மாணவனை தாக்கிய காவல் ஆய்வாளர் ராமச்சந்திரனை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மக்கள் நடமாட்டமுள்ள சாலையில் இந்த நிகழ்வு நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அராஜக போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் செய்வதரியாது திகைத்து நின்றார்.
மேலும், பொதுமக்கள் திமுக ஆட்சியில் நாளுக்கு நாள் காவல்துறையின் அராஜகம் அதிகரித்து கொண்டு செல்வதாக கூறி வேதனையடைந்து சென்றனர். மாணவர் தினேஷும் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ராமச்சந்திரன் தாக்கியதில் பல் ஒன்று ஆடியதால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றார் .
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.