ரயிலில் கஞ்சா கடத்திய கும்பல்… சோதனையில் சிக்கிய 13 கிலோ கஞ்சா… வடமாநில நபரை கைது செய்த போலீசார்..!!

Author: Babu Lakshmanan
30 May 2022, 4:57 pm

வேலூர் : வேலூரில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 13 கிலோ கஞ்சா பறிமுதல் வட மாநிலத்தைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலைய ஆய்வாளர் சித்ரா தலைமையிலான போலீசார் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுகிறதா என சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது, ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் இருந்து பெங்களூர் கண்டோன்மென்ட் விரைவு ரயிலில் D2 கோச்சில் சோதனை மேற்கொண்டனர். அதில், பாத்ரூம் அருகே 3 பைகளில் 13 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்து கஞ்சா கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சக்ரதர் ​​செட்டி என்பவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 840

    0

    0