ஒடிசா TO திருப்பூர்… ரயிலில் பண்டல் பண்டலாக கஞ்சா… இரு இளைஞர்களை கைது செய்த போலீஸ்..!!

Author: Babu Lakshmanan
20 May 2024, 8:57 pm

ஒரிசாவில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 25 கிலோ கஞ்சாவை குடியாத்தத்தில் பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த குடியாத்தம் போலீசார் அவ்வழியாக வந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், முன்னுக்கு பின்னாக பதிலளித்தனர். பின்னர், அவர்கள் கொண்டு வந்த 3 பேக்கினை சோதனை செய்து பார்த்தபோது, அதில் 23 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு 2.50 லட்சம் ஆகும்

அவர்களை தீவிர விசாரணையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது காலித் (32), திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அபிஷேக் (31) என்பது தெரியவந்தது. இருவரும் ஒரிசாவில் கஞ்சா வாங்கிக்கொண்டு ரயில் மூலம் திருப்பூர் மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி வருவது தெரியவந்தது. ரயில் குடியாத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: உலகரங்கில் இந்தியாவிற்கு மிகப்பெரிய தலைகுனிவு… ஈழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு ; மத்திய அரசுக்கு சீமான் விடுத்த கோரிக்கை..!!!

சோதனை மேற்கொள்வதை கண்ட முகமது காலித் மற்றும் அபிஷேக் இருவரும் குடியாத்தம் ரயில் நிலையத்தில் இறங்கி வந்ததாக விசாரணையில் தெரியவந்தது. பின்னர் இருவரையும் கைது செய்த குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி வழக்கு பதிவு செய்து இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து ரயில் மூலம் ஒரிசாவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா வருவது தொடர் கதையாகவே இருப்பதாகவும், இதனை தமிழக அரசு தடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தொடர்ந்து கஞ்சா மற்றும் குட்கா வேலூர் மாவட்டத்தில் அதிக அளவு போலீசாரால் பறிமுதல் செய்யப்படுவதாகவும், மற்ற மாநிலத்தில் உள்ள போலீசார் இதனை கண்டு கொள்வதில்லை எனவும் பொதுமக்கள் மத்தியில் பேசி வருகின்றனர்.

  • S. J. Surya director comeback மீண்டும் இயக்குனராகும் பிரபல நடிகர் :10 வருட இடைவெளிக்கு பிறகு எடுத்த திடீர் முடிவு…!
  • Views: - 398

    0

    0