உரிய நிவாரணம் வழங்காததால் விரக்தி.. நெற்பயிரை தீயிட்டு கொளுத்திய விவசாயி.. வேலூரில் துயரம்..!!

Author: Babu Lakshmanan
1 December 2022, 2:31 pm

வேலூர் அருகே பாதிக்கப்பட்ட நெல் பயிறுக்கு உரிய நிவாரணம் வழங்காததால் நெற்பயிரை விவசாயி தீயிட்டு கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை கொண்டாரெட்டியூரை சேர்ந்த விவசாயி சிவகுமார். இவர் தனக்கு சொந்தமான 3 ஏக்கரில் விளை நிலத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன் பயிரிட்டப்பட்டிருந்த நெல்பயிற்கள் அறுவடைக்கு தயாராக இருந்தது.

இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக பெய்த மழையினால் பாதிக்கப்பட்டதாகவும், இதற்காக மத்திய அரசின் பிரதான் மந்திரி பாசல் பீமா யோஜனா திட்டத்தில் 1300 ரூபாய் செலுத்தி காப்பீடு செய்துள்ளார்.

ஆனால், பயிர் பாதிக்கப்பட்டது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும், இதுவரை நேரில் ஆய்வு செய்யவில்லை என்றும், உரிய நிவாரணம் வழங்காததை கண்டித்து இன்று தனது பயிரை தீயிட்டு கொளுத்தினார். மேலும் இனியாவது அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தனக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

“விவசாயி சிவகுமார் செய்துள்ள பயிற்காப்பீட்டு திட்டம் அறுவடை காலத்தில் தான் கணக்கிடப்படும். மேலும், இது வெள்ள பாதிப்பு அல்ல. அவரது காப்பீடு மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். காப்பீட்டு தொகை வர ஓராண்டாவது ஆகும். ஆக சிவகுமாரின் நெல் பாதிப்பு குறித்து கணக்கிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என காட்பாடி வேளாண் உதவி அலுவலர் (அசோக்குமார்) தகவல் தெரிவித்தார்.

  • shri not even got payment from biggboss பிக்பாஸ்ல இருந்து Payment வரல; அவன் இப்படி ஆனதுக்கு காரணம்? ஸ்ரீயின் தோழி ஓபன் டாக்…
  • Close menu