இயந்திரங்களுக்கு ஆயுதப்பூஜை கொண்டாடிய எந்திரன்… VIT பல்கலைக்கழகத்தில் அசத்தல் ; வைரலாகும் வீடியோ கண்டு ஆச்சரியம்..!!

Author: Babu Lakshmanan
24 October 2023, 6:44 pm

வேலூர் ; காட்பாடியில் உள்ள வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் ரோபோக்களால் அதிநவீன ஆயுத பூஜை கொண்டாடப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் நவீன முறையில் ஆயுத பூஜை விழாவானது கொண்டாடப்பட்டது. இதில், பல்வேறு நாடுகளையும், மாநிலங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், இப்பல்கலைக்கழகத்தில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. இதில் அதி நவீன முறையில் ரோபோவே ஆயுத பூஜையை போட்டு பணியாளர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் பொரி கடலை மற்றும் பழங்கள் ரோபோவே வழங்கியது. இது அனைவரின் மத்தியிலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 889

    0

    0