இரு பெண் குழந்தைகளுடன் ரயிலில் பாய்ந்து பெண் தற்கொலை… கணவனின் முதல் மனைவி மனம் மாறியதால் விரக்தி…!

Author: Babu Lakshmanan
27 February 2024, 1:41 pm

வேலூர் அருகே இரு பெண் குழந்தைகளுடன் பெண் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்மூர் அடுத்த வேலம் சேர்ந்தவர் அறிவழகன் (40). இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கும், வெண்ணிலா (35) என்பவருக்கும் திருமணம் ஆகி ஏழு ஆண்டுகள் ஆன நிலையில், இருவருக்கும் ஜெனிஸ்ரீ(5), தர்னிகா (3) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.

அறிவழகனுக்கும், அவரது முதல் மனைவி விஜயலட்சுமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததால், நீதிமன்றத்தில் விவாகரத்துக்காக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், முதல் மனைவி விஜயலட்சுமி மீண்டும் அறிவழகன் உடன் வாழ வேண்டுமென வேலம் பகுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால், ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக வெண்ணிலா மற்றும் அவரது இரண்டு பெண் குழந்தைகள் வாலாஜா ரயில் ரோடு நிலையத்தில் காட்பாடி ரயில்வே நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அந்தோதயா அதிவிரைவு ரயில் முன்பு பாய்ந்தனர். இதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காட்பாடி ரயில்வே போலீசார், மூவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்பப் பிரச்சனை காரணமாக ரயில் முன் பாய்ந்து தாயுடன் 2 குழந்தைகள் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

  • Varun Dhawan Keerthy Suresh viral video அட்லீ போனை பார்த்து கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி…ஒரு டைரக்டர்-க்கு உண்டான மரியாதையே போச்சு…!
  • Views: - 582

    0

    1