வேலூர் ; பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காத ஆத்திரத்தில் பேருந்து கண்ணாடியை உடைக்க சுத்தியுடன் வந்த பெண்ணால் ஒடுக்கத்தூர் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
குடியாத்தம் பகுதியில் இருந்து இரவு 7 மணி அளவில் அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றுக்கொண்டு ஒடுக்கத்தூர் நோக்கி புறப்பட்டது. பின்னர், இரவு 8.30 மணி அளவில் ஒடுகத்தூர் பேருந்து நிலையம் அருகே பேருந்து வந்து கொண்டு இருந்தது. அப்போது பேருந்து நிலையம் திரும்ப வளைவில் அரசு பேருந்து நிற்கவில்லையாம். இதனால், அந்த பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் ஏன் வளைவில் பேருந்து நிற்கவில்லை.
நான் அங்குதான் இறங்க வேண்டும் என்று நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரிடம் நடத்துனர் அங்கு பேருந்து நிறுத்தம் கிடையாது. நான்கு மணி சந்திப்பில் தான் நிற்கும் என்று எடுத்துக் கூறினார். ஆனால், அதை எதையுமே காதில் வாங்காத, அந்த பெண் நாங்களும் ரவுடிதான் பாணியில் திடீரென கையில் சுத்தியுடன் வந்து அதெல்லாம் எனக்கு தெரியாது.
நீங்கள் சம்பளம் வாங்குறீங்க இல்ல, எனக்கு அந்த இடத்தில் தான். இறங்கனும் எப்படி வேறு இடத்தில் இறக்கிவிடலாம், என்று கூறியபடி பேருந்து கண்ணாடியை உடைப்பது போல் ஆபாசமாக பேசினார்.
ஆனாலும், அந்த பெண்ணிடம் எவ்வளவு கூறியும், அவரின் கோபம் அடங்கவில்லை. பின்னர் ஒரு கட்டத்தில் அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுக்க தொடங்கி விட்டனர். இதனை கவனித்த அந்த பெண் அங்கிருந்து சென்று விட்டார். இந்த சம்பவத்தால் அங்கு நீண்ட வரிசையில் பேருந்து வேன் போன்ற வாகனங்கள் வரிசை கட்டி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.