வேலூர் : வேலூர் அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த செதுவாலை பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விரிஞ்சிபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சேகரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை நிறுத்தி சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அவர் வேலூர் கொணவட்டத்தை சேர்ந்த நரேஷ்குமார் என்பதும் அவர் வைத்திருந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் நரேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
நரேஷ்குமார் யாரிடம் இருந்து கஞ்சா வாங்கினார், அதனை எங்கு கொண்டு செல்கிறார் என்பது குறித்து விசாரித்து வருவதாக விரிஞ்சிபுரம் போலீசார் தெரிவித்தனர்.
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
This website uses cookies.