வேங்கைவயல் விவகாரம்.. பொதுமக்களிடம் விசாரணை நடத்தாமல் சென்ற ஒருநபர் ஆணையம் ; குழப்பத்தில் பாதிக்கப்பட்டவர்கள்..!!
Author: Babu Lakshmanan6 May 2023, 11:38 am
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயண தலைமையிலான ஒரு நபர் ஆணையம், ஆய்வுக்கு பிறகு பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணை மேற்கொள்ளாமல் சென்ற சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணா தலைமையிலான ஒரு நபர் ஆணையம் வேங்கை வயல் கிராமத்தில் மலம் கலந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றை பார்வையிட்டது.
பின்னர், பொதுமக்களை சந்தித்து எந்தவித குறைகளையும் கேட்காமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆய்வு கூட்டத்திற்காக புறப்பட்டு சென்றார்.
பொதுமக்களிடம் விசாரணை செய்வதற்காக வேங்கை வயல் அரசு பள்ளியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஓய்வு பெற்ற நீதிபதி சத்ய நாராயணா பொதுமக்களிடம் எந்தவித விசாரணையும் செய்யாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆய்வு கூட்டத்திற்காக புறப்பட்டு சென்றார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கவிதா ராமு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி வருவாய்த்துறை சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளின் உயர் அதிகாரிகளோடு ஆலோசனை செய்தார்.
0
0