“என் இயக்கத்தில் இணையும் விஜய்,அஜித்?” வெங்கட் பிரபு சொன்ன மாஸ் அப்டேட்..!

Author: Vignesh
27 September 2022, 11:00 am

இயக்குனர் வெங்கட் பிரபு எப்போது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாலும் அவரிடம் ரசிகர்கள் கேட்கும் கேள்வி விஜய் மற்றும் அஜித் பற்றியது தான். அவர்கள் இருவரையும் இணைத்து எப்போது ஒரு படம் எடுக்க போகிறீர்கள் என்கிற கேள்வியை தான் எல்லோரும் கேட்டு வருகிறார்கள்.

அவரும் தவறாமல் அது பற்றி பேசிவிடுகிறார். சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட அவர் வழக்கம் போல மங்காத்தா 2 பற்றி பேசி இருக்கிறார்.

விஜய்,அஜித் இருவரையும் இணைத்து திரையில் காட்ட வேண்டும் என்கிற ஆசை எனக்கும் இருக்கிறது. அவர்கள் ஒன்றாக இருக்கும்போதே அதை அவர்களிடம் கூறி இருக்கிறேன். அவர்களுக்கும் ஆசை இருக்கிறது.

“அது எப்போது நிறைவேறும் என்பதற்காக நான் ஆசையுடன் காத்திருக்கிறேன். அவர்கள் ஒப்புக்கொண்டால் பெருசா மங்காத்தா 2 எடுத்துவிடலாம்” என வெங்கட் பிரபு கூறி இருக்கிறார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி