டாஸ்மாக்கில் வாங்கிய மதுபாட்டிலில் விஷப்பூச்சி… மது அருந்தியவருக்கு வாந்தி, பேதி : வைரலான வீடியோவால் குடிமகன்கள் ஷாக்!!
Author: Udayachandran RadhaKrishnan14 November 2023, 1:29 pm
டாஸ்மாக்கில் வாங்கிய மதுபாட்டிலில் விஷப்பூச்சி… மது அருந்தியவருக்கு வாந்தி பேதி : வைரலான வீடியோவால் குடிமகன்கள் ஷாக்1
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஜக்கம்பட்டியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது
இந்த டாஸ்மாக் கடையில் தீபாவளியை முன்னிட்டு, நேற்று பிற்பகல் மூன்று இளைஞர்கள் மது வாங்கி அருந்தி உள்ளனர்.
இந்நிலையில் பாதி பாட்டில் காலியான பிறகு கவனித்தபோது மது பாட்டிலுக்குள், விஷ பூச்சி இறந்து கிடந்துள்ளது. இதனை தொடர்ந்து மது அருந்திய ஒருவருக்கு வாந்தி பேதி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக உடன் வந்தவர் டாஸ்மாக் கடையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். டாஸ்மாக் ஊழியர்களிடமிருந்து எவ்வித பொறுப்பான பதிலும் கிடைக்காததால், மது பிரியர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த வீடியோ தற்பொழுது சமூகவலைதளத்தில் பரவி வைரலாகி வருவதை தொடர்ந்து, மது பிரியர்கள் பீதி அடைந்துள்ளனர்