விசாரணை வளையத்தில் சிக்கிய விக்கி – நயன் தம்பதி : இரட்டை குழந்தை விவகாரம் குறித்து புதிய தகவலை கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 October 2022, 1:31 pm

நயன்-விக்கி குழந்தை விவகாரத்தில் 3 பேர் கொண்ட குழுவினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர்.

இவர்களின் இந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதேசமயம் திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது சலசலப்பை கிளப்பி பல கேள்விகளை எழுப்பியது.

அதன்பின்னர் வாடகைத் தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டது தெரியவந்தது. இதிலும் சர்ச்சை எழுந்தது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க பல்வேறு விதிமுறைகள் இருக்கும் நிலையில், இந்த விதிமுறைகளை நயன்-விக்கி தம்பதி மீறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

Vignesh Shivan Nayanthara
Ma Subramanian
Twins

நயன்-விக்கி குழந்தை விவகாரம் குறித்து செய்தியாளர்கள் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்திப்பில் பேசும் போது, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன பின்னரே வாடகை தாய் மூலம் குழந்தை பெற இயலும்.

Vignesh Shivan Nayanthara
Ma Subramanian
Twins

இணை இயக்குனர் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். நயன்தாரா, விக்னேஷ் சிவன் சிகிச்சை பெற்ற மருத்துவமனை குறித்தான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழுவினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த விசாரணைக் குழுவினர் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்