ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி கைதானவர் பாஜக உறுப்பினரே அல்ல.. திமுகக்காரர் : எஸ்ஜி சூர்யா பதிவு!

Author: Udayachandran RadhaKrishnan
10 February 2025, 3:55 pm

செங்கல்பட்டு பாஜக தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் லியாஸ் தமிழரசன், பெண்களை காதலிப்பது போல் நடித்து உல்லாசமாக இருந்ததை வீடியோவாக எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யா, கைதானவர் பாஜக உறுப்பினரே இல்லை என விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
இன்றைய தேதியில் லியாஸ் தமிழரசன் பா.ஜ.க இளைஞரணி மாவட்ட செயலாளர் என்பதற்கு என்ன ஆதாரத்தை ஊடகங்கள் வைத்துள்ளன?

இவரது தந்தை பரம்பரை தி.மு.க-காரர். லியாஸ் தமிழரசன் தி.மு.க மற்றும் அம்பேத்கர் சேனா அமைப்புகளில் இருந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க-வில் இணைந்துள்ளார்.

இதையும் படியுங்க: பல முறை உல்லாசம்.. வீடியோ எடுத்து மிரட்டி ₹50 லட்சம் பறிப்பு : பாஜக பிரமுகரின் கோர முகம்!

பா.ஜ.க-வில் அனைத்து பொறுப்புகளும் கடந்த செப்டம்பர் முதலே காலாவதியாகி விட்டது. 2024 செப்டம்பர் மாதம் துவங்கிய இந்த பருவத்திற்கான புதிய உறுப்பினர் புதுப்பித்தலை கூட லியாஸ் தமிழரசன் செய்யவில்லை என கண்டுபிடித்துள்ளோம். அதன் அடிப்படையில் இன்றைய தேதிக்கு லியாஸ் தமிழரசன் பா.ஜ.க-வின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை.

SG Sruyah

பின் எப்படி இவனை பா.ஜ.க மாவட்ட செயலாளர் என அனைத்து தமிழக ஊடகமும் சொல்லி வைத்தது போல் அழைக்கிறது? ஊடகங்கள் உண்மையை சரி பார்த்து செய்திகளை வெளியிட வேண்டாமா?

இணைக்கப்பட்டுள்ள படங்கள்:

  1. லியாஸ் தமிழரசன் அவனது தி.மு.க வாகனத்தில்.
  2. லியாஸ் தமிழரசன் தி.மு.க-வில் அடித்த போஸ்டர்.

3 & 4. லியாஸ் தமிழரசன் தந்தை R.ஏழுமலை தி.மு.க பொறுப்பில் இருப்பதற்கான கல்வெட்டு ஆதாரம்.

பின்குறிப்பு: லியாஸ் தமிழரசன் தந்தையும் தி.மு.க நிர்வாகியுமான R.ஏழுமலை இன்று காலை முதல் absconding ஆம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

  • ஆண்டியால் பறிபோன வாய்ப்பு..நடிகர் கரண் வீழ்ந்தது எப்படி…பிரபலம் சொன்ன அந்த தகவல்.!
  • Leave a Reply