ஆவின் பாலில் தண்ணீர் கலந்த வீடியோ… தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மறுப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
5 September 2024, 10:41 am

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் செயல்படும் ஆவின் பால் தொகுப்பு குளிா்விப்பான் மையத்துக்கு கடந்த மாா்ச் 15-ஆம் தேதி லாரியில் எடுத்துச்செல்லப்பட்ட பாலில் லாரி ஓட்டுநா் தண்ணீா் கலப்பதாக ஆவின் விரிவாக்க அலுவலா் ஜான் ஜஸ்டின் தேவசகாயம் விடியோ பதிவு செய்து மதுரை ஆவின் நிர்வாக பொது மேலாளரிடம் புகார் அளித்திருந்தார்

அதனைத்தொடர்ந்து ஆவின் நிர்வாகம் அன்றைய தினமே சம்பந்தபட்ட வாகன ஓட்டுநரை பணியிலிருந்து நீக்கியதுடன், அவரது வாகனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து நடவடிக்கை மேற்கொண்டது.

கடந்த 2018 முதல் 2020 வரை ஆவின் பொருள்கள் விற்பனை செய்த தொகையை ஆவினில் செலுத்தாமல் ஜான் ஜஸ்டின் கைவசம் வைத்துக்கொண்டதாக கூறப்படும் நிலையில் அவரது மாத சம்பளத்திலிருந்து மாதந்தோறும் பிடித்தம் செய்யும்படி பொது மேலாளா் உத்தரவிட்டார்.

இதன் காரணத்தால், கடந்த 4 மாதங்களுக்கு முன்னா் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை தற்போது நடந்ததாகவும், ஆவினில் முறைகேடுகள் நிகழ்வதாகவும் ஜான் ஜஸ்டின் பொய்யான தகவல்களை ஊடகங்களில் பரப்பி வருவதாக அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் ஆவினின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் ஜான் ஜஸ்டின் விடியோ வெளியிட்டதற்கு மறுப்பு தெரிவித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆவின் புது மேலாளர் இடம் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகி பழனியப்பன் என்பவர் கூறுகையில்,” ஆவின் பாலில் தண்ணீர் கலப்பதாக புகார் எழுந்த நிலையில் அன்றைய தினமே சம்பந்தப்பட்ட நபர்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ஆவின் நிர்வாகத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக தவறான வீடியோவை வெளியிட்ட ஜான் ஜஸ்டின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்”என்றார்.

  • nayanthara Happy children’s day…. குழந்தைகளுடன் கொண்டாடிய விக்கி – நயன் தம்பதி – கியூட் கிளிக்ஸ் வைரல்!
  • Views: - 163

    0

    0