கலெட்கர் சட்டையை பிடித்து கன்னத்தில் பளார் விட்டுட்டு வா, மின் இணைப்பு தருகிறேன் : தரக்குறைவாக பேசிய மின்துறை அதிகாரியின் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
20 June 2023, 2:11 pm

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் கல்லக்குடி மின்நிலைய பணியாற்றி வரும் இளநிலை பொறியாளர் (JE) ஸ்ரீதரிடம் கல்லக்குடி புதிய சமத்துவபுரம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு அப்பகுதிமக்கள் மின் இணைப்பு வேண்டி கேட்டுள்ளனர்.

அப்போது மின் ஊழியர்கள் பட்டியல் எல்லாம் ஆன்லைனில் உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று கலெக்டர் கன்னத்தில் ஒரு அரையறுந்து அவனிடம் வாங்கிட்டு வா தருகிறேன் என தரைகுறைவாக பேசியும், கோயிலுக்கு தானே புண்ணியமா போகும் மின் இணைப்பு கொடுங்கள் என்று கேட்டதற்கு கலெக்டர் சட்டை பிடித்துக் கேளுங்கள் என்று கூறியுள்ளார்.

கலெக்டர் சட்டை கோர்த்து பிடித்து எழுதி வாங்கி வாருங்கள் நான் அடுத்த நொடியே மின் இணைப்பு தருகிறேன் என்றும், நீங்கள் வாங்கி வந்தால் உங்கள் கோயிலுக்கு நான் பணம் கட்டுகிறேன் என்றும், வருமானம் முழுவதும் அவனிடம் தான் உள்ளது என கலெக்டரை குறிப்பிட்டு கூறுகிறார்.

மேலும் கோயில் பேரில் தடையில்லா சான்று கிராம நிர்வாக அலுவலரிடம் மற்றும் தாசில்தார் இடமும் வாங்கி வா, நான் தருகிறேன் என்றும், நீங்கள் சொல்லுவதை எழுதிக் கொடுக்க வேண்டும் என்றால் மாதம் எனக்கு 10 லட்சம் தருகிறீர்களா என்று கேட்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இதற்கு மின்வாரிய அதிகாரிகளும் மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!