’அதற்கு நான் காரணமல்ல’.. ராஷ்மிகா வரிசையில் பிரபல நடிகை!

Author: Hariharasudhan
3 March 2025, 7:44 pm

தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சமூக வலைத்தளங்களிலும், வாட்ஸ்அப்பிலும் நான் இடம்பெற்றிருப்பது போன்ற சில வீடியோக்கள் பரவி வருகின்றன. ஆனால், அவை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் (AI) போலியாக உருவாக்கப்பட்டவை.

மேலும், அதன் உருவாக்கம் மற்றும் அதனைப் பரப்புவதில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. அதில் வரும் விஷயங்கள் எதையும் நான் ஆதரிக்கவும் இல்லை. வீடியோவில் கூறப்படும் எந்தக் கருத்துக்கும் நான் காரணம் அல்ல. இதுபோன்ற வீடியோவை பகிர்வதற்கு முன்பு ரசிகர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

வித்யா பாலன்: கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், அஜித்குமார் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வித்யா பாலன். பாலிவுட்டில் பிரபலமான இவர், தெலுங்கு சினிமாவிலும் நந்தாமுரி பாலகிருஷ்ணா உடனும் நடித்துள்ளார்.

Vidhya Balan deep fake video

மேலும், இவர் நடித்த The Dirty Pictures என்ற படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. முன்னதாக, நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, ஆலியா பட், தீபிகா படுகோன் மற்றும் கேத்ரினா கைஃப் உள்பட பலரது போலி டீப்ஃபேக் வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதையும் படிங்க: அனுஷ்கா சர்மா சொன்னதும் வீடீயோவை டெலீட் பண்ணிட்டேன்..அசிங்கப்பட்ட நடிகர் மாதவன்.!

மேலும், ராஷ்மிகா டீப்ஃபேக் வீடியோ விஸ்வரூபம் எடுத்த நிலையில், சமூக வலைத்தளங்களில் டீப்ஃபேக் உள்ளடக்கங்கள் பகிரப்படுவதைத் தடுக்க புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்றும், புதிய விதிமுறைகளை உருவாக்கும் பணி உடனடியாக தொடங்கப்பட இருப்பதாகவும் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.

  • sincere thanks to ajith kumar sir shared by arjun das என் மேல நம்பிக்கை வச்சதுக்கு மிக்க நன்றி அஜித் சார்- அர்ஜுன் தாஸ் உருக்கம்