கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி : குழந்தைகளுடன் குவிந்த பெற்றோர்கள்!!!
விஜயதசமியை முன்னிட்டு சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் நடைபெற்று வரும் வித்யாரம்பம் எனப்படும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து எழுத்தறிவித்து வருகின்றனர்.
விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு வித்யாரம்பம் எனப்படும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி அனைத்து ஐயப்பன் கோவில்களிலும் நடைபெறும்.
இந்நிகழ்வில் ஐயப்பனை வழிபட்டு குழந்தைகளை அரிசி தட்டில் எழுத்துக்களை எழுத வைத்தால் கல்வியறிவு மேம்படும் என்பது ஐதீகம். அதன் படி பெரும்பாலான ஐயப்பன் கோவில்களில் இந்த எழுத்தறிவுத்தல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் அதிகாலை முதல் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து ஐயப்பனை வழிபட்டு அரிசி தட்டில் எழுத்துக்களை எழுத வைக்கின்றனர்.
விஜயதசமியை முன்னிட்டு அக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் தொடர்ந்து வருகை புரிந்து வருவதால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இந்தியன் 3 பட ரிலீஸில் சிக்கல் தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் இயக்குனர் ஷங்கர்,பிரபலமான நடிகர்களை வைத்து…
நடிகர் கவின் சின்னத்திரை மூலம் பிரபலமாகி வெள்ளித்திரையில் கால் பதித்த கவின், தனித்துவமான கதைகளை தேடி தேடி தேர்வு செய்து…
NEEK Vs DRAGAN நடிகர் தனுஷ் இயக்கி தயாரித்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் கடந்த 21ஆம்…
கேம் சேஞ்சர் படத்தில் 350 துணை நடிகர்களுக்கான சம்பளம் கொடுக்காமல் இருப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளனர். சென்னை: பிரமாண்ட் இயக்குநராக…
நல்ல நண்பர்களாக வலம் வந்த தமிழ் சினிமா நட்சத்திரங்களான தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே தற்போது கோர்ட்டில் கேஸ் நடத்தும்…
This website uses cookies.