விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி : அரிசியில் எழுத்துக்களை எழுதி வழிபாடு!!

Author: Udayachandran RadhaKrishnan
24 October 2023, 9:45 am

நவராத்திரி 10-ம் நாள் விஜயதசமியை முன்னிட்டு கிருஷ்ணகிரி ஐயப்பன் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. 3 வயது நிரம்பிய தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் பங்கு பெற செய்தனர்.

பள்ளியில் சேரும் முன் இறைவனை பிராத்தித்து குழந்தைகளுக்கு கல்வி செல்வம் கிடைக்க வேண்டி நடத்தும் வழிபாட்டினை வித்யாரம்பம் என்பர்.

கிருஷ்ணகிரி ஐயப்பன் கோவில் நடை பெற்ற இந்த நிகழ்ச்சியில் தங்கம் போன்ற உலோகத்தை தேன் போன்ற தூய்மையான பொருளில் தொட்டு நாவில் தமிழ் எழுத்துக்கள், குலதெய்வ பெயர், குழந்தைகள் பெயர் எழுதினர்.

இது குழந்தைகளின் பேச்சு திறனை வழுபடுத்தும். மேலும் அரிசியில் தமிழ் எழுத்துக்களான “ஆ” மற்றும் “ஓம்” மற்றும் குலதெய்வ பெயர், குழந்தைகள் பெயர் எழுதி எழுத்து பயிற்ச்சியை சொல்லி தந்தனர். இந்த வழிபாட்டை விஜயதசமி நாளில் செய்வது மிகவும் சிறப்பு. குழந்தைகளின் கல்வி வளர இந்த வழிபாட்டில் பெற்றோர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

  • திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!