விடிய விடிய விஜிலென்ஸ் ரெய்டு.. ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் சிக்கிய ரூ.10.98 லட்சம்!

Author: Udayachandran RadhaKrishnan
6 July 2024, 1:55 pm

ஈரோடு ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில் நடந்த, லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில், 10.98 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் ஐந்தாவது மாடியில் ஊரக வளர்ச்சி துறை அலுவலகம் இயங்குகிறது. இங்கு உதவி செயற்-பொறியாளராக, ஊரக வளர்ச்சி துறை கோபி அலுவலகத்தின் உதவி செயற்பொறியாளர் மோகன் பாபு கூடுதல் பொறுப்-பாக கவனிக்கிறார்.

கோவையை சேர்ந்த மோகன் பாபு கோபியில் அறை எடுத்து தங்கியுள்ளார். ஊரக வளர்ச்சி துறை வளர்ச்சி பணிகளை, அரசு ஒப்பந்ததாரர்களுக்கு ஒதுக்கீடு செய்ய, லஞ்சம் பெறுவதாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., ராஜேஸ் தலை-மையில், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார், ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில், கடந்த 4ஆம் தேதி மாலை அதிரடி சோதனை நடத்தினர்.

விடிய விடிய நடந்த சோதனையில் 10 லட்சத்து, 40 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக சிக்கியது. மோகன் பாபுவிடம் இருந்து, 58 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக மோகன்பாபு மீது, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  • Good Bad Ugly திடீரென டிராக்கை மாற்றும் அஜித்.. டென்ஷனான GBU டீம்!