‘வருங்கால குழந்தைக்கு இப்போதே தயாராகும் நயன் – விக்கி’ – புகைப்படத்துடன் விக்னேஷ் சிவன் போட்ட பதிவால் ரசிகர்கள் குழப்பம்..!

விக்னேஷ் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து நயன்தாரா கர்ப்பமாக இருக்கிறாரா? என்று ரசிகர்கள் பதிவிட்டு வரும் பதிவு சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கோலிவுட்டில் மீடியாவில் இளம் ஜோடிகளாக திகழ்ந்து கொண்டு இருப்பவர்கள் விக்னேஷ் சிவன்- நயன்தாரா.

இருவருமே தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நபர்களாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அதிலும் நயன் அவர்கள் நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். அனைவரும் எதிர்பார்த்த படி நயன்-விக்கி திருமண விழா மெஹந்தி நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கி இருந்தது. அந்த விழாவில் அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டிருந்தனர்.

அந்த நிகழ்ச்சியில் பல வித்தியாசமான சம்பவங்கள் நடைபெற்று இருந்தது. பின் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விக்னேஷ் – நயன்தாரா திருமணம் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. –

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம்:

கடற்கரை ஓரம் திறந்தவெளியில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் இந்து பாரம்பரிய முறைப்படி மணமகள் நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டி இருந்தார். இந்த திருமணத்தில் இரு வீட்டாரும், அவருடைய நெருங்கிய நண்பர்களும், சில முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றிருந்தனர். இவர்களுடைய திருமண உடைகள் புகழ்பெற்ற ஜேட் குழுமத்தால் நவீன உடைகள் ஏற்றவாறு பாரம்பரியம் சற்றும் குறையாத வண்ணம் வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலும், இவர்களின் இல்லற வாழ்வு சிறக்க திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள்.

திருமணத்திற்கு பின் விக்கி-நயன்:

அதோடு கடந்த ஜூன் மாதம் முழுவதும் ஹாட் டாப்பிக்காக இருந்தது விக்னேஷ் சிவன்- நயன் திருமணம் தான். மேலும், திருமணம் முடிந்த கையுடன் இந்த தம்பதிகள் ஜோடியாக கோயிலுக்கு சென்று இருந்தார்கள். இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் ஹனிமூனுக்காக வெளிநாடு சென்று அங்கு எடுத்த புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. சமீபத்தில் முடிவடைந்த 44வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை விக்னேஷ் சிவன் தான் நடத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்- விக்னேஷ் சிவன் பணிபுரியும் படங்கள்:

இதற்கிடையில் நயன்தாரா அவர்கள் தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் அவர்கள் சேர்ந்து ஸ்பெயின் நாட்டில் ஜாலியாக விடுமுறையை கொண்டாடியிருக்கிறார். தற்போது இருவரும் தங்களின் பட வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்கள். நயன் அவர்கள் கனெக்ட், ஜவான், கோல்ட், காட்ஃபாதர், இறைவன் என்று பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதேபோல் விக்னேஷ் சிவன் அவர்கள் அஜித் நடிக்கும் 62 வது படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

விக்னேஷ் பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்:

இந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் பதிவிட்டு இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, அந்த புகைப்படம் விக்னேஷ் சிவன்- நயன்தாரா துபாயில் இருக்கும்போது எடுக்கப்பட்டது. விக்னேஷ் சிவன் பதிவிட்ட புகைப்படத்தில் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுகிறோம். இது வருங்காலத்தில் எங்களுக்கு உதவும் என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் கூறியதன் மூலம் இருவருமே விரைவில் பெற்றோராக இருப்பதை உறுதி செய்கிறார்களா? நயன்தாரா கர்ப்பமாக இருப்பதை தான் விக்னேஷ்வன் இப்படி மறைமுகமாக கூறியிருக்கிறாரா? என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

Poorni

Recent Posts

பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?

நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…

3 hours ago

தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?

கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…

5 hours ago

அதிமுகவிடம் கணிசமான தொகுதிகளை கேளுங்க.. மேலிடத்துக்கு HINT கொடுத்த அண்ணாமலை!

தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…

6 hours ago

காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!

கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…

6 hours ago

நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா? கமல்ஹாசனை பற்றி பேசி ட்ரோலுக்குள்ளான சூப்பர் ஸ்டார்

உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…

8 hours ago

காதல் திருமணம் செய்த மகள் கொடூர கொலை… பெற்றோர் அரங்கேற்றிய நாடகம்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…

8 hours ago

This website uses cookies.