தனது திருமணம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் விக்னேஷ் சிவன்.. வைரல் வீடியோ இதோ.!

Author: Rajesh
7 June 2022, 11:34 am

தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுவது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் தான். இவர்களது திருமணம் எப்போது என்று பல வருடங்களாக காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். அதாவது வருகின்ற ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் இவர்களது திருமணம் நடக்க உள்ளது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்த நானும் ரவுடிதான் மற்றும் காத்துவாக்குல 2 காதல் படத்தில் பணியாற்றி உள்ளனர். இந்நிலையில் தற்போது நயன்தாரா பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

மேலும் விக்னேஷ் சிவன் தற்போது காத்துவாக்குல 2 காதல் படத்திற்குப் பிறகு அஜித்தை வைத்து ஏகே 62 படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில் இப்படம் தொடங்குவதற்கு முன்னதாகவே நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் நடக்க உள்ளது.

சமீபத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளனர். மேலும் இவர்களது திருமணத்திற்கு திரைத்துறையைச் சார்ந்த பல்வேறு பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனிடையே இந்த திருமண விழாவை படமாக எடுத்து பிரபல ஓடிடி தளத்தில் வெளியிட இயக்குனர் திட்டமிட்டுள்ளாராம். அதாவது கௌதம் வாசுதேவ் மேனன் தான் தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்தை ஆவணப்படமாக எடுக்க உள்ளாராம். தனது திருமணம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் விக்னேஷ் சிவன்.. வைரல் வீடியோ இதோ.!

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 713

    1

    0