விக்னேஷ் சிவன் – நயன்தாரா உறவில் மனகசப்பா..? காரணம் அந்த பிரபல நடிகையா..?

Author: Rajesh
21 April 2022, 6:08 pm

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகை இருப்பவர் தான் நடிகை நயன்தாரா தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் பாலிவுட் படமான லயன் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காத்துவாக்குல 2 காதல்.

இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை நயன்தாரா தனது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே நயன்தாரா தான் நடிக்கும் படங்களின் விளம்பரத்திற்கு வரமாட்டார் என்ற செய்தி சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்நிலையில் தன்னுடைய சொந்த தயாரிப்பில் உருவான காத்துவாக்குல 2 படத்தின் விளம்பரத்திற்கு நயன்தாரா வரமாட்டேன் என மறுத்துள்ளார். இதற்கு முக்கிய காரணமாக இரண்டு விஷயங்கள் கூறப்படுகிறது. அதாவது விஜய் சேதுபதி தற்போது பல படங்களில் கமிட்டாகி பிசியான நடிகராக வலம் வருகிறார்.

இந்நிலையில் இப்படத்திற்காக விஜய் சேதுபதி வருடக்கணக்காக கால்ஷீட் கொடுத்துள்ளார். ஆனால் அதை விக்னேஷ் சிவன் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால் விஜய் சேதுபதிக்கு சில மனக்கசப்புகள் ஏற்பட்டுள்ளது. இதை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என நயன்தாரா, விஜய் சேதுபதியிடம் நேரில் சென்ற தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

ஆனால் விஜய் சேதுபதி நயன்தாராவிடம் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டுள்ளார். இதெல்லாம் விக்னேஷ் சிவனால் தான் என்ற கோபத்தில் நயன்தாரா உள்ளார். மேலும் சில தினங்களுக்கு முன்பு நடந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் சமந்தா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர்.

இதனை பார்த்து வெளியில் சிரித்த நயன்தாரா மனதளவில் உச்சகட்ட கோபத்தில் இருந்து உள்ளாராம். மேலும் இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு நயன்தாரா தனது சொந்த தயாரிப்பு விளம்பரத்திற்கு வரமாட்டேன் என கூறிவிட்டார். நயன்தாரா வராததால் சமந்தாவும் வர மறுத்துவிட்டாராம். இந்நிலையில் படத்தை எப்படி விளம்பரப்படுத்துவது என்ற குழப்பத்தில் உள்ளார் விக்னேஷ் சிவன்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 1872

    1

    5