விஜய்யின் விக்கை வைத்து கேவலப்படுத்திய விஜய் டிவி தொகுப்பாளர் : வைரலாகும் வீடியோ!!

Author: Rajesh
1 August 2022, 11:42 am

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி பிரியங்கா. இவர் கடந்த பிக் பாஸ் 5ல் கலந்துகொண்டார். அதே நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்டவர்கள்இ அமீர் மற்றும் பாவனி. இந்த மூவரும் தற்போது நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள்.

அதுமட்டுமின்றி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக அமீர் மற்றும் பாவனி இருக்க, பிரியங்கா அந்த நிகழ்ச்சியை ராஜுவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் நடிகை அமலா பால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.இதனால், அவர் நடித்த படத்தின் நடிகர்களை வைத்து ,அவர்களின் கதாபாத்திரத்தை போல விஜய் டிவியின் நகைச்சுவையாளர்கள் வேடமிட்டு வந்து சர்ப்ரைஸ் கொடுத்தார்கள்.

அப்பொழுது தலைவா படத்தில் வரும் விஜய் போல யோகி வேடமிட்டு வந்தார். அவர் விஜய் கேட்பிற்கு ரஜினிகாந்தின் விக் அணிந்திருந்ததை பார்த்த பிரியங்கா, விஜய் சார் விக் எங்கடா, நீ அணிந்திருப்பது ரஜினி சார் விக் என கிண்டலாக கூறியுள்ளார். இதை தற்போது மற்ற நடிகர்களின் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

  • Ajith screamed after Vijay's dialogue.. INTERVAL scene from GOOD BAD UGLY leaked விஜய் பட வசனத்தை வைத்து அலறவிட்ட அஜித்.. GOOD BAD UGLY படத்தை கொண்டாடும் ரசிகர்கள்!!