பல கோடிகளை உதறிவிட்டு அரசியல் வந்திருக்காரு விஜய்.. அவரை நாம்தான் முதலமைச்சராக்கணும் : புஸ்ஸி ஆனந்த்!
Author: Udayachandran RadhaKrishnan8 July 2024, 1:53 pm
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்டத் தலைவர் பரணி பாலாஜி என்பவர் மகளின் மஞ்சள் நீராட்டு நிகழ்வில் கலந்து கொண்டார்.
பின்னர், அங்கிருந்த தமிழக வெற்றி கழகத்தின் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.
தளபதியின் பிறந்தநாளை மட்டும் தான் வருடம் 375 நாளும் கொண்டாடுகிறோம், நாம் கடந்த 30 வருடமாக அன்றையிலிருந்து இன்றுவரை நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம் பல ஏழை மக்களுக்கு உதவிகள் செய்து கொண்டிருக்கிற கட்சி தமிழக வெற்றி கழகம். தளபதி என்று சொன்னாலே நமக்கு எனர்ஜி கிடைக்கும்.
நாம் கண்டிப்பாக அந்த தளபதியை தமிழ்நாட்டின் முதல்வராக அமர வைக்க வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன். உங்களின் ஒவ்வொருவரின் உழைப்பால் தான் தமிழ்நாட்டில் நமது இலக்கை 2026 வெற்றிபெறும்,
கண்டிப்பாக 2026 அதற்கு நாம் உழைக்க வேண்டும், உண்மையாக உழைக்க வேண்டும், மக்களுக்காக உழைக்க வேண்டும், மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என பேசினார்.
இந்த நிகழ்வில், 500க்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.